முதுமலை காட்டில் மொட்டைத் தலையுடன் வீரப்பன்?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி:

வீரப்பனும் அவருடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் மொட்டைத் தலையுடன் முதுமலைக் காடு பகுதியில்நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் அதிரடிப்படையினரின் "வீரப்பன் வேட்டை"தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் முதுமலைக்காட்டுப் பகுதியில் உள்ள கொப்பாபுரம் என்ற இடத்தில் 5 பேர் தலையில்மொட்டையுடன் வந்ததாக, அப்பகுதி மக்கள் கூறினர்.

அந்த மொட்டைத் தலையர்கள், கடைகளில் அரிசி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை வாங்கிச்சென்றதாகவும் அம்மக்கள் கூறினார்கள்.

அவர்கள் 5 பேருமே வீரப்பனும், அவருடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள்அதிரடிப்படை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் தலைமையிலான அதிரடிப் படையினர் வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, இந்த மொட்டைத் தலையர்களைத் தேடும் வேட்டையிலும், அதிரடிப்படையினர் தீவிரமாகஇறங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+