டான்சி வழக்கு: உச்ச நீதிமன்ற தடையை நீக்க கோரி ஜெ. மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி வழக்கில், ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக்கோரி, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால் இன்று(திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட டான்சி நில பேர ஊழல் வழக்கில், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கிசென்னை தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜெயலலிதா கடந்தசட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

அதே போல் கொடைக்கானல் பிளசன் ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில்ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கிதனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தனக்கு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை ரத்து செய்யக்கோரி சென்னை உ.யர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாமேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் 27ம் தேதிதொடங்கி நடந்து கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தனது வாதத்தை முடித்துவிட்டார்.

தொடர்ந்து, சசிகலா தரப்பு வாதங்களும் முடிந்திருந்த நிலையில், ஆகஸ்டு 30ம் தேதி, ஜெயலலிதாவின் அப்பீல் மனுவிசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம். அவர் தன்னுடைய மனுவில் கூறியுள்ளதாவது:

டான்சி வழக்கிலும், கொடைக்கானல் ஹோட்டல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவரே தற்போது முதல்வராகஇருப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் முறையான நீதி கிடைக்கும் என்று கூற முடியாது.எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் இந்த வழக்கு குறித்த ஆவணங்கள் எனக்கு குறித்த நேரத்தில் தரப்படவில்லை. அந்த ஆவணங்களைபடிப்பதற்கு எனக்கு போதிய கால அவகாசமும் தரப்படவில்லை என்று வெங்கடபதி கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பரூச்சா அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய பெஞ்ச்ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்குஇடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவின்வழக்கறிஞர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தன் மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு சிறப்பு வழக்கறிஞர் வெங்கடபதி, தன் மனுவில் கூறியிருப்பது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.அவருக்கு வழக்கு குறித்த ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளதும் உண்மைக்குப் புறம்பானது.தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறுகையில், தனக்கு அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றுவெங்கடபதியே கூறியிருந்தார்.

வழக்கின் விசாரணை வேகமாக நடந்துவரும் நிலையில், அதற்கு தடைவிதிக்க வேண்டிய அவசியம் என்ன?ஜெயலலிதா நவம்பர் மாதம் 13ம் தேதிக்குள் எம்.எல்.ஏவாக் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்முதல்வராக நீடிக்க முடியும்.

வழக்கின் விசாரணை தள்ளிப்போவது அவருக்கு பாதகமாக அமையும். எனவே உச்ச நீதிமன்றம் விதித்துள்ளஇடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+