ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க "கமாண்டோ" படை
சென்னை:
குழியில் விழுந்த சிறுவன் இறந்து போனதன் எதிரொலியாக, ஆபத்துகளில் சிக்கியவர்களை மீட்க சென்னையில் 20பேர் கொண்ட கமாண்டோ படை அமைக்கப்படுகிறது.
சென்னை ஆடியபாதம் தெருவில், ஆழ்குழாய் அமைக்கத் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து தமிழ்மணிஎன்ற சிறுவன் 2 நாட்களுக்கு முன் மரணமடைந்தான்.
மீட்புக்குழுவினர் கடுமையாகப் போராடியும், அந்த தெரு மிகக்குறுகலானதாக இருந்ததால் சிறுவனை உயிருடன்மீட்க முடியாமல் போனது.
இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தடுக்க, போர்வெல்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இது போன்ற ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக தனியாக ஒரு சிறப்புக் கமாண்டோபடை அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் இணைக் கமிஷனர் சைலேந்திர பாபு கூறியதாவது:
சென்னையில் ஆபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக 20 பேர் கொண்ட தனி கமாண்டோ படைஅமைக்கப்படுகிறது. இந்தப் படைக்குத் தலைவராக நான் செயல்படுவேன்.
இந்தப் படையினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எந்தவித ஆபத்துகளில் இருந்தும் பொதுமக்களைக்காப்பாற்றும் விதம் இந்தப் படை செயல்படும்.
இவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் உதவிகள் செய்வார்கள். இந்தப் படைக்கான வீரர்கள்உடனடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்சைலேந்திர பாபு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications