தென் ஆப்பிரிக்கா டூர் - தயார் நிலையில் டெண்டுல்கர்
மும்பை:
அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில்,சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று கிரிக்கெட்வாரிய செயலாளர் ஜயவந்த் லேலே கூறினார்.
தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் அணியில் இணைய தயாராக இருப்பதாகவும், அதற்கான மருத்துவச்சான்றிதழை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின்செயலாளர் ஜயவந்த் லீலே கூறியதாவது:
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது சச்சின் டெண்டுல்கருக்கு வலது கால் பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று, டாக்டர் மார்க் பெர்குஷன் என்பவரிடம் சிகிச்சை பெற்றார்.அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் டெண்டுல்கர் இப்போது உட்புறம் மேடான "ஷூ" அணிய உள்ளார்.
இதன்மூலம் அவருக்கு ஓடும்போதும், விளையாடும் போதும் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று டாக்டர்கள்தெரிவிக்கின்றனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அவருடைய தகுதிச் சான்றிதழை எங்களுக்கு அனுப்பிவைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மேலும், அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே, தனது தோள்பட்டையில் ஆப்பரேசன் செய்து கொண்டதால்கடந்த ஜனவரி மாதம் முதல் அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
இப்போது அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், விரைவில் தனது தகுதிச் சான்றிதழை எங்களுக்குஅனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல், ஜவகல் ஸ்ரீநாத்தும் அணியில் இடம் பெறுவதற்கான முழு உடல் தகுதியைப் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த 3 பேரும் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மூட்டுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள வி.வி.எஸ்.லக்ஷ்மணன், தனதுநிலை பற்றி இன்னும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கானுக்கு இலங்கையில் விளையாடும் போது மேவாயில் ஏற்பட்ட காயம் விரைவில் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேபோல அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஆசிஸ் நேஹ்ராவும் விரைவில் குணமடைந்து அணிக்குத் தகுதிபெறுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் லேலே.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications