பிஜி தேர்தலில் மகேந்திர சவுத்திரி வெற்றி
சுவா:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்வரும், ஃபிஜி நாட்டின் முன்னாள் பிரதமருமான மகேந்திர சவுத்திரி, நடந்து முடிந்தஃபிஜி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
16 மாதங்களுக்கு முன்னால் ஃபிஜியின் பிரதமராக இருந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர சவுத்திரி,புரட்சிகாரர்களால் பதவியைவிட்டு இறக்கப்பட்டார். மகேந்திர சவுத்திரியும், அவரது அரசை சேர்ந்தவர்களும் 56நாட்கள் பிணைக்கைதிகளாக நாடாளுமன்றத்திலேயே றை வைக்கப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் உலகத்தின் பார்வையை ஃபிஜியின் பக்கம் திருப்பியது. தற்போது, ஃபிஜியில் அமைதிநிலவிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஃபிஜி நாடாளுமன்ற தேர்தலில் மகேந்திர சவுத்திரியும்,புரட்சி தலைவர் ஜார்ஜ் ஸ்பைட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
சவுத்திரி இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் தொகுதியில் போட்டியிட்டு, மிகவும் எளிதாக வெற்றிபெற்றுள்ளார்.
சவுத்திரிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஃபிஜி நாட்டைச் சேர்ந்தவரும், ராணுவத்தால் பிரதமராகநியமிக்கப்பட்டவருமான லைஸ்னியாகார்சும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
ஃபிஜியில் உள்ள 71 தொகுதிகளிலும் சவுத்திரியின் கட்சியான தொழிலாளர்கட்சி போட்டியிட்டது. இதுவரைஅறிவிக்கப்பட்டுள்ள 30 தொகுதிகளுக்கான முடிவில் 18 தொகுதிகளில் மகேந்திர சவுத்திரி கட்சியினர் வெற்றிபெற்றுள்ளனர்.
ராணுவத்தால் பிரதமராக நியமிக்கப்பட்ட கார்சால் புதிதாக துவக்கப்பட்ட ஃபிஜி யுனைடெட் கட்சி 7 இடங்களில்வெற்றி பெற்றுள்ளது. ஃபிஜியின் தேசிய கட்சி கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சவுத்திரியின் தொழிலாளர்கட்சி பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம் சவுத்திரிக்கு மக்கள் அளித்து வந்த ஆதரவுதொடர்ந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஜார்ஜ் ஸபைட் வெற்றி
புரட்சி செய்து மகேந்திர சவுத்திரியை பதவியிலிருந்து இறக்கியவரும், புரட்சிகாரர்களின் தலைவருமான ஜார்ஜ்ஸ்பைட்டும் தான் போட்டியிட்ட டைல்வூ தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் புரட்சியில் ஈடுபட்டு அப்போது பிரதமராக இருந்த மகேந்திரசவுத்திரியையுயம், அவரது அரசை சார்ந்தவர்களையும் 56 நாட்கள் பிணைக்கைதியாக வைத்திருந்த வழக்குதொடர்பாக, இன்று (புதன்கிழமை) காலை ஸ்பைட்டும், அவரது ஆதரவாளர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட்டும் அவரது ஆதரவாளர்கள் 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications