காயல்பட்டினம் அருகே தோன்றிய திடீர் தீவு

Subscribe to Oneindia Tamil

காயல்பட்டினம்:

தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் கடல் பகுதியில் திடீரென்று ஒரு தீவு தோன்றியுள்ளதால், அவற்றைப்பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் திடீரென்று ஒரு மணல் திட்டு இப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தோன்றியது.காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இந்த மணல் திட்டு உருவாகியுள்ளது.

இந்த மணல் திட்டு தானாகவே அடுத்த 2 வாரங்களுக்குள், கடலுக்குள்ளேயே திரும்பவும் மூழ்கிவிடும் என்றுசிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பும், இதே போல ஒரு மணல் திட்டுதோன்றி, மறைந்ததாக சிலர் கூறினர்.

கடந்த சனிக்கிழமை வரை, 5 அடி உயரமாக இருந்த இந்த மணல் திட்டு, தற்போது உயரம் குறைந்து கொண்டேவருகிறது என்று அடிக்கடி இதை நேரில் பார்த்து வருபவர்கள் கூறினர்.

பவளப் பாறைகள் மற்றும் மணல் சிப்பிகள் சேர்ந்து இதுபோன்ற திட்டுக்களை ஏற்படுத்துகின்றன என்று சிலர்கூறினர்.

ஆனாலும், இதை ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே மீனவர்கள் கருதுகின்றனர். மீன் பிடிப்பதற்காக நீண்ட தூரம்செல்லும் சில மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக இது அமைந்துள்ளது என்கின்றனர்.

காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து, படகின் மூலம் கூட்டம் கூட்டமாக மக்கள் இந்தத் திடீர் தீவைப் பார்த்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+