ஜெ. முதல்வரானதை எதிர்க்கும் வழக்கு: நீதிபதி பெஞ்ச் சராமாரி கேள்வி
டெல்லி:
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்கக்கூடாது என்று தொடரப்பட்டபொதுநல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன் இன்று (புதன்கிழமை) தொடர்ந்துநடைபெற்றது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் முதல்வராக பதவி வகிப்பது ஜனநாயகத்திற்கும், அரசியல்சட்டவிதிமுறைக்கும் புறம்பானது. அரசியல் சட்டம் 164ன் படி குற்றம் சாட்டப்பட்டு தண்டைனை பெற்ற எவரும்முதல்வராக பதவி வகிக்ககூடாது.
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்த அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை நான் விமர்சிக்கவிரும்பவிலலை என்று சோலி சொராப்ஜி கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "ஆளுநரை விமர்சிப்பதை தவிர்ப்பதிலிருந்து விலகுவது தவிர வேறு எந்த வழியும்கிடையாது. அதற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் முடியாது. ஆனால் ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்ட நாளில்அவர் தகுதியுடையவராக இல்லை என்பது தான் உங்கள் வாதம்" என்றார்.
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே வாதம்
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே மத்திய அரசின் சார்பாக ஆஜராகி வாதாடினார். ஜெயலலிதா முதல்வராகபதவி வகிக்ககூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆதரித்து அவர் வாதாடினார். அவர் தன் வாதத்தில்,
அரசியல் சட்டத்தின்படி ஒருவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இருக்கும் போது அவர்முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ பதவி வகிக்கும் தகுதியையும் இழந்தரவராகிறார். அப்படிப்பட்டஒருவர் அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ பதவி வகிப்பது சட்டத்திற்கு புறம்பானது.
அரசியல் சட்டம் 164 (4) பிரிவு எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்க 6 மாத காலஅவகாசம் கொடுத்துள்ளது. அந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது அவர் பதவியில் தொடர்வதற்குமக்களால் எம்.எல்.ஏவாகதேர்ந்தெடுக்கப் படுவதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் தான்.
தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர் தனது தகுதியின்மையை போக்கிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அல்ல என்றார் சால்வே.
நீதிபதிகளின் கேள்விக் கணைகள்
அட்டர்னி ஜெனரலின் வாதத்தை கேட்ட நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்,சராமாரியாகக் கேள்விக் கணைகளை அனுப்பியது. அவை:
ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்ககூடாது என்று தீர்ப்பளித்தால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின்நிலை என்ன?
அரசு இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், செயல்படுத்தவுள்ள திட்டங்களின் நிலை என்ன?
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு உண்டு என்றால் அது என்ன?
ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர்வதை தடை செய்தால், அந்தத் தடை நீக்கப்படும் காலம் வரையிலானஇடைக்காலத்தில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?
இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன?
இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் கால அவகாசம்கேட்டுக் கொண்டார். விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறும்.












Click it and Unblock the Notifications