ஈரோடு: கொலை வழக்கில் 14 பேருக்கு ஆயுள்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அதிமுக பிரமுகர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் 2 பாமகபிரமுகர்கள் உட்பட 14 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பவானி அருகேயுள்ள சின்னமேட்டூர் புன்னம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணி என்ற குப்புசாமி. இவர் இதேபகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தார். இதனால்சின்னமேட்டூரைச் சேர்ந்த மாரியப்பனின் ஆதரவாளர்களுக்கு மணி மீதுமுன்கோபம் இருந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அன்று, மாரியப்பனின் ஆட்களான காவேரி, நாகராஜ் மற்றும் சிலர்மணியிடம் வந்து, "மாரியப்பன் கொலை சம்பந்தமாக உன்னிடம் பவானி ஒன்றிய பா.ம.க. செயலாளர் சண்முகமும்,ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் ராமநாதனும் பேச விரும்புகிறார்கள். எனவே எங்களுடன் வந்தால்அவர்களைச் சந்திக்கலாம்" என்று கூறி மணியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அனைவர் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போது, மணிக்கும் மற்றவர்களுக்கும்வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. பிறகு மணியை சமாதானப்படுத்தி அருகில் உள்ள சின்னக்கவுண்டர் என்பவரதுகாட்டிற்கு அழைத்துச் சென்றுனர்.
பின்னர் காவேரி, நாகராஜ் மற்றும் குமாரசாமி ஆகியோர் உட்பட அங்கிருந்தவர்கள் மணியின் கை மற்றும்கால்களைக் கட்டிவிட்டு, அவரது வயிற்றிலும், தலையிலும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். பிறகுபினத்தை மூட்டையில் கட்டி அருகேயுள்ள ஏரியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மணியைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்ததையடுத்து, 5 நாட்கள் கழித்துபிணம் கண்டெடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சின்னமேட்டூரைச் சேர்ந்த குமாரசாமி, காவேரி, நாகராஜ், செல்வன், மாணிக்கம், சண்முகம்,ராமதேவன், வையாபுரி, தங்கவேல், ஜெயராமன், சின்னக்கவுண்டர், மற்றும சேர்வராயன் பாளையத்தைச் சேர்ந்தசண்முகம் (பா.ம.க., பவானி ஒன்றியச் செயலாளர்), முத்துப் பையன், ராமநாதன் (ஈரோடு மாவட்ட முன்னாள்செயலாளர்) ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இவர்கள் மீது ஆட்களைக் கடத்திச் செல்லுதல், கொலைச் சதித்திட்டம் தீட்டுதல் உட்பட பல பிரிவுகளில் வழக்குத்தொடரப்பட்டது. பிறகு கொலையில் சம்பந்தப் பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மாவட்ட 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கொலையில் சம்பந்தப் பட்ட 14பேருக்கும் அயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications