57 வயது வரை எவரும் ஆசிரியராகலாம் - தம்பிதுரை
சென்னை:
"தமிழகத்தில் ஆசிரியராவதற்கு விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு முற்றிலுமாக நீக்கப்படுகிறது. 22 முதல் 57வயதுள்ள யார் வேண்டுமானாலும் ஆசிரியர் பதவிக்கு வரலாம்" என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரைகூறியுள்ளார்.
முன்பெல்லாம் பணத்தைக் கொடுத்தால் தான் இடமாற்றம் பெறமுடியும் என்ற நிலை ஆசிரியர்களுக்கு இருந்தது.அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப் படி கவுன்சிலிங் முறை அறிமுகப் படுத்தப்பட்டு,அந்தச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. மேலும் யாருக்காவது,இந்தத் திட்டங்களில் குறைகள் தென்பட்டால் தாராளமாக எங்களை அணுகி தெரிவிக்கலாம். அதைச் சரிசெய்யநாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
மேலும் கடந்த ஆட்சியில் ஆசிரியப் பணிக்குச் சேர வயதுவரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால் அதிமுகஅரசு அதை நீக்கிவிட்டு 22 முதல் 57 வயது வரையுள்ள யாரும் ஆசிரியப் பணியில் சேரலாம் என்றுஅறிவித்துள்ளது.
இதன்மூலம் வயதுவரம்பே இல்லாமல் அதிக மதிப்பெண் பெற்ற திறமைசாலிகள் அனைவரும் இந்தப் பணிக்கு வரமுடியும்.
ஆசிரியர்கள் மத்தியில் அரசியல் முத்திரை இருப்பது தவறானது. ஆசிரியர்கள் அனைவரும் திமுகவைச்சேர்ந்தவர்கள்தான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆசிரியர்களில் திமுக, அதிமுக உள்பட அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
சில ஆசிரியர்கள், தேர்தலின் போது உதயசூரியன் சின்னத்தில் கள்ள ஓட்டுப் போடுவதை நானே நேரில்பார்த்திருக்கிறேன். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றுநாங்கள் எண்ணவில்லை என்றார் தம்பிதுரை.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications