திமுக பேரணி வன்முறையில் கைதான 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக்குமார் கடந்த 29ம் தேதி முன்பு வந்தது. அப்போது நீதிபதி, "இவர்கள்15 பேரும் உண்மைக்குற்றவாளிகள் அல்ல. எனவே, விரைவில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும்" என்று அரசு தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
அரசு வக்கீலும், செப்டம்பர் 5ம் தேதிக்குள் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றுஉதியளித்தார். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை, செப்.6) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் முடிவில் நீதிபதி அசோக்குமார் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரர்கள் கடந்த 19 நாட்களாக சிறையில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல்தகவல் அறிக்கையில், அயோத்திக் குப்பம் பகுதி மக்கள் ஆயுதங்களால் தாக்கியதை போலீசாரால் தடுக்கமுடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களிடமிருந்து போலீசார் ஆயுதங்கள் எதையும் பறிமுதல் செய்ததாகவோ, அது தொடர்பாகஅடையாள அணிவகுப்பு நடத்தப் பட்டதாகவோ போலீசார் தரப்பில் தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த 29ம் தேதி விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் உறுதியளித்தபடி, உண்மைக் குற்றவாளிகள்யாரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை.
எனவே இந்த 15 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்கிறேன். இவர்கள் அனைவரும் ரூ.5,000க்கானரொக்க ஜாமீனும், 2 நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். மேலும், இவர்கள் அனைவரும் சேலத்தில் தங்கி இருந்து,அங்குள்ள முதலாவது ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications