பாலங்களை சீரமைக்க ரூ.200 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பழமையான, பாழடைந்த பாலங்களை ரூ. 200 கோடி செலவில் புதுப்பிக்க மாநில அரசுதிட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறினார்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது மாநிலம் முழுவதிலும் பாழடைந்து, பழுதடைந்து உள்ளசிறிய அளவிலான பாலங்களை சரி செய்ய ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது 47 பழைய சிறு பாலங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. நபார்டு வங்கி மற்றும் தனியார் முதலீடுஆகியவற்றின் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படும்.
இதேபோல, மாநிலத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளும் பழுது பார்த்து சீரமைக்கப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications