ஏர்வாடி சாலையில் சுற்றித் திரிந்த மன நோயாளிகள்
ராமநாதபுரம்:
கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் சாலையில் திரிந்து கொண்டிருந்த 13 மன நோயாளிகளை போலீசார் பிடித்துராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஏர்வாடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் அங்கே இருந்த 300க்கும் அதிகமான மன நோயாளிகளை அவர்களது உறவினர்கள் தங்கள் வீடுகளுக்குஅழைத்துச் சென்று விட்டார்கள்.
மீதமிருந்த மன நோயாளிகள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவில் 20 மனநல நோயாளிகள்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முரட்டுத்தனமானவர்கள். இவர்கள் மருத்துவமனையிலிருந்துஅடிக்கடி தப்பி ஓடி விடுகின்றனர். இங்கிருந்து தப்பி ஓடிய 3 மன நேயாளிகளின் கதி என்ன என்பதேதெரியவில்லை.
ஏர்வாடியில் உறவினர்கள் ஆதரவில்லாத யாரும் இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டதால் அதிகமான மனநேயாளிகள் சாலைகளில் திரிந்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, ராமநாதபுரம் போலீஸ் கண்காணிப்பாளர்உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் மன நேயாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்கா அருகே திரிந்து கொண்டிருந்த 9 மன நோயாளிகளையும், தர்கா பக்கம் கை,கால்களில் விலங்குகளுடன் கட்டி போடப்பட்டிருந்த 3 மன நோயாளிகளையும் பிடித்து ராமநாதபுரம்மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் கீழக்கரையில் முரட்டுத்தனமாக திரிந்து கொண்டிருந்த ஒரு மன நோயாளியையும் போலீசார் பிடித்துமருத்துவமனையில் அனுமதித்தனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications