சந்தன மரக் கடத்தல் - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஓசூர் கால்நடைப் பண்ணையில் 200 ஆண்டு கால பழமையான சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டதில் அரசுஅதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக மாநில வனத்துறைஅமைச்சர் திருநாவுக்கரசு இன்று (சனிக்கிழமை) சட்டசபையில் கூறியுள்ளார்.

ஓசூர் அருகே உள்ள அரசு கால்நடைப் பண்ணையில் 200 ஆண்டு கால பழமையான சந்தன மரம் இருந்தது.ஆசியாவிலேயே மிகப் பழமையான மரம் என்ற சிறப்பு இதற்கு உண்டு.

இந்த மரம் கடந்த 5ம் தேதி திடீரென ஒரு கும்பலால் வெட்டிக் கடத்தப்பட்டது. இது சனிக்கிழமை சட்டசபையில்,பெரும் புயலைக் கிளப்பியது. சட்டசபையில் இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள்எழுப்பிய கேள்விகளுக்கு மாநில வனத்துறை அமைச்சர் திருநாவுக்கரசு பதிலளிக்கையில்,

கால்நடைப் பண்ணையில் இருந்த பழமையான சந்தன மரத்தை வெட்டி விடலாம் என்று கால்நடைத்துறை சார்பில்அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் அதன் பழமை கருதி அதற்கு அரசு அனுமதி மறுத்து விட்டது.

இந்த நிலையில் ஒருகும்பல் கடந்த 5ம் தேதி மரத்தை வெட்டிக் கடத்தியுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணைநடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட கால்நடைப் பண்ணையில் காவலுக்கு இருந்த 7 பேர் இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும், கால்நடைத்துறை மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றுகூறப்படுவதால் அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார் திருநாவுக்கரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+