மரபுப்படி ஜெ.வைச் சந்திக்காது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்
கோயம்புத்தூர்:
மரபுப்படி ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தால், நானும் மரபுப்படி அவரைச்சந்தித்திருப்பேன் என்று சென்னை மேயர் ஸ்டாலின் கூறினார்.
திமுகவை அழித்துவிட வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது எப்போதும், எந்தக் கொம்பனாலும் முடியாது.திமுகவைப் போல வெற்றிபெற்ற கட்சியும் கிடையாது, தோல்வியடைந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை கலைஞர்தான் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தார் என்றுபொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அதை மக்கள் நம்பி ஏமார்ந்து அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால், இந்தஉள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் நாடகம் எதுவும் பலிக்காது.
முதல்வரான பிறகு மரபுப்படி என்னை வந்து சென்னை மேயர் சந்திக்கவில்லை என்று ஜெயலலிதா கூறினார்.ஆனால் முதல்வராகப் பதவியேற்கும் விழாவிற்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை.
மரபுப்படி அவர் முதல்வராகி இருந்தால் நானும் அவரை மரபுப்படி சந்தித்திருப்பேன். இப்போதாவது, மரபுப்படிமுதல்வராவார் என்று எதிர்பார்த்தேன். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றார் ஸ்டாலின்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications