திமுக கூட்டணியில் நீடிப்போம் - திருநாவுக்கரசு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தமது கட்சி நீடிக்கும் என்று எம்.ஜி.ஆர். அதிமுக தலைவர்திருநாவுக்கரசு அறிவித்தார்.
மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியிலும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலானதிமுக கூட்டணியிலும் நாங்கள் இருக்கிறோம். இந்தக் கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.
எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எந்தெந்த தொகுதியில் எங்கள் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.
மேலும் திமுக தரப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழு அமைக்கப்படவில்லை.அவர்கள் குழு அமைத்தவுடன் நாங்கள் எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள பகுதிகளை எடுத்துக் கூறிமுடிவு செய்வோம்.
கடந்த 3 மாதகால ஆட்சில் ஜெயலலிதா ஆட்சி எதையும் சாதிக்கவில்லை. எதிர்க் கட்சிகளைப் பழிவாங்குவதிலேயே முழுக் கவனமும் செலுத்தப்படுகிறது. பொதுமக்களும் இந்த ஆட்சியின் மீது வெறுப்படைந்துவிட்டனர் என்றார் திருநாவுக்கரசு.
திமுக கூட்டணியில் தொடர்கிறது மூ.மு.க.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி நீடிக்கும் என்று மூவேந்தர் முன்னேற்றக்கழம்அறிவித்துள்ளது.
மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் டாக்டர் சேதுராமன் சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்குப்பேட்டியளிம்போது:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.கவுடனான எங்கள் கூட்டணி தொடரும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்குவதற்காக, கோவிலுக்கு அருகிலஅன்னதான மண்டம் கட்டவுள்ளோம். அடுத்த ஆண்டு இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விடும்.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.ஆனால், அதே சமயம் மக்களின் முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், தான் பதவியில் தொடர வேண்டும்என்ற குறிக்கோளுடன் சட்ட போர் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இதே நிலை தொடர்ந்தால் தமிழக மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் என்றார் டாக்டர் சேதுராமன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications