காவிரி பிரச்சனையில் அரசியல் கூடாது - கருணாநிதி
சென்னை:
தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெறும் விஷயத்தை அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் கையாளவேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி நதி நீர் ஆணையத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதிகாரிகள்கொண்ட குழு அமைத்திருந்தால் இந்தப் பிரச்சனை எளிதில் தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
பிரதமரைத் தலைவராகக் கொண்டு, 4 மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கமிட்டி தீர்க்கமுடியாததை, அதிகாரிகள் மட்டுமே கொண்ட கமிட்டி எவ்வாறு தீர்க்க முடியும்? இந்தக் கமிட்டிதான் தீர்க்க முடியும்என ஜெயலலிதா எவ்வாறு நம்புகிறார் என்று எனக்குப் புரியவில்லை.
1998ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் என்னை காவிரி நீர்ப் பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக அழைத்தார். அதுபோல மற்ற 3 மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது நான் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். அந்தக் கூட்டத்தில் நான் எடுக்கும்முடிவை ஏற்றுக் கெள்வதாக அனைத்துக் கட்சிகளும் கூறின. அதிமுகவும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகளை ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையத்தில், உறுப்பினராக 4 மாநில முதல்வர்களும்இருப்பது என்ற முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆனால் இப்போது இந்த முடிவுகளை அதிமுக உள்பட சிலகட்சிகள் எதிர்க்கின்றன.
பொதுவாக காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் அரசியல் நோக்கம் இருக்கக் கூடாது. அப்போதுதான் இதற்குத்தீர்வுகான முடியும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications