விஷச் சாராய சாவுகள்: மெத்தனால்தான் காரணம் - 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அம்பத்தூர் அருகே 13 பேர் உயிரை குடித்த விஷச் சாராயத்தில் மெத்தனால் எனப்படும் கெமிக்கல்கலந்திருந்ததுதான் காரணம் என்று போஸ்ட்மார்ட்ட அறிக்கை கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மேனாம்போட்டில், விஷச்சாராயம் குடித்த 13 பேர்உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் டி.எஸ்.பி. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் கொடுத்துள்ள முதல் தகவல்கள், சாராயத்தில்மெத்தனால் கலந்துள்ளதால் தான் அதை குடித்தவர்கள் இறந்ததற்கு காரணம் என தெரிவிக்கின்றன. விரிவானமருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் பகுதியில்கள்ளச்சாராயம் அதிகமான புழக்கத்தில் இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ -எம்) தமிழக தலைவர் சங்கரையா விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காகஅரசு எல்லா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+