காவிரி பிரச்சனை: சட்டசபையில் திமுக வெளிநடப்பு
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் தமிழக சட்டசபையிலிருந்து சனிக்கிமை வெளிநடப்புசெய்தனர்.
அமைச்சர் தளவாய் சுந்தரம் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசிய பின்பு திமுக உறுப்பினர்துரைமுருகன், காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.
"பிரதமர் தலைமையில் உள்ள காவிரி ஆணையத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா? அதற்கு இந்த அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என்று கேட்டார்.
"இது குறித்து சபையில் விவாதிக்க வேண்டாம். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது இது பற்றி விவாதிக்கலாம்" என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
ஆனால், துரைமுருகன் தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. "சட்டசபையில் காவிரி பிரச்சனை குறித்துவிவாதிக்கக்கூடாதா?" என்று காரமாக கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் இதற்கும் பதில் தயாராக வைத்திருந்தார். "காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்றுஎனக்கும் விருப்பம் தான். மாலையில் நடக்கும் கூட்டத்திலும் நான் கலந்து கொள்ள முடியாது. மாலையில்அனைத்து கட்சி கூட்டப்பட்டிருப்பதால் இங்கே விவாதிக்க வேண்டாம் என்று கூறுகிறேன்" என்றார்.
அப்போதும் திருப்தியடையாத துரைமுருகன், "நான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்படாததால் நாங்கள்வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறி அனைத்து தி.மூ.கவினருடனும் வெளிநடப்பு செய்தார்.
அவர்கள் வெளிநடப்பு செய்த பின் அமைச்சர் பொன்னையன் கூறுகையில், "மத்திய அமைச்சரையில் அங்கம்வகிக்கும் திமுக அமைச்சர்கள் பிரதமரை வலியுறுத்தி தமிழகத்திற்கு காவிரி நீரை வாங்கித் தரவேண்டும். அவர்கள்அது போல் செய்தாதது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்" என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் த.மா.க. உறுப்பினர் ஞானசேகரனும், "தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தராதவர்கள் மத்தியஅமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
பின்னர் மீண்டும் சபாநாயகர் பேசும்போது, "காவிரி பிரச்சக்ைகாக இங்கிருந்து வெளிநடப்பு செய்தவர்கள்,விரைவில் மத்திய மந்திரி சபையில் இருந்தும் வெளியேறும் நிலை விரைவில் எற்படும் என்று எண்ணுகிறேன்"என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications