திமுக கூட்டணியில் சேர மதிமுக, பாமகவுக்கு பாஜக அழைப்பு
சென்னை:
"சட்டசபைத் தேர்தலின்போது பிரிந்து சென்ற மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை, வரும் உள்ளாட்சித்தேர்தலின்போது திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சேர்க்க முயற்சிகள் எடுப்போம்"என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
தேசிய அளவில் வாஜ்பாய் தலைமையை ஏற்றுள்ள பாமக மற்றும் மதிமுக ஆகியவற்றை தமிழகத்தில் திமுகதலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைக்க பாஜக ஆர்வத்துடன் உள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை தமிழக பாஜகவைச்சேர்ந்த மூன்று பேர் அடங்கிய குழு நேரில் சந்தித்து, இணைப்பு குறித்துப் பேசுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்துப் பேச பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் எச். ராஜா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாநில பாஜக தேர்தல் குழு 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் கூடி வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications