திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு மழை... சட்டசபையில் பெரும் அமளி
சென்னை:
தமிழக உணவு மற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பி. தனபால், கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததாககூறியதையடுத்து தமிழக சட்டசபையில் 45 நிமிடம் பரபரப்பு நிலவியது.
கடந்த திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிபிசிஐடி மற்றும்லஞ்ச ஊழல் தடுப்புத்துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள்.
கொப்பரை தேங்காய் கொள்முதலில் ரூ.112 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
தமிழ் நாட்டில் 1995-96ம் ஆண்டு 251.59 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. 1998-99ல் இது 1001டன்னாக அதிகரித்தது.
1999-2000ம் ஆண்டு தேசிய அளவில் 2.25 லட்சம் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.அதில் தமிழக அரசு மட்டும் 1.12 லட்சம் டன் கொள்முதல் செய்துள்ளது..
மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் விலை ரூ.22.50 என்று நிர்ணயித்தது. ஆனால் தமிழக அரசு ஒருகிலோ கொப்பரைத் தேங்காயை ரூ.32.50 கொடுத்து, 1.12 லட்சம் டன் கொப்பரைத் தேங்காயைக் கொள்முதல்செய்துள்ளது. இதில், ரூ.112 கோடி ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து விசாரிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றார்.
அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் 45நிமிடம் பெரும் பரபரப்பு நிலவியது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications