உச்ச நீதிமன்றத்திற்கு பேக்ஸ் அனுப்பிய அமைச்சர் - கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
டான்சி வழக்கில், அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் வெங்கடபதி மீது அவதூறு கூறி உச்ச நீதிமன்றத்திற்குபேக்ஸ் அனுப்பி, சட்டத்தை தமிழக அமைச்சர் தளவாய் சுந்தரம் மீறியுள்ளார் என்றும் இதன் மூலம் அவர் தன்பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தன் வீட்டிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பேக்ஸ் செய்தி ஒன்றைஅனுப்பியுள்ளார்.
அதில், "அரசு வழக்கறிஞர் வெங்கடபதிக்கு டான்சி நில ஆவணங்கள் எல்லாம் முறைப்படி வழங்கப்பட்டு, அதைப்படிக்க அவருக்கு தேவையான நேரமும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தவறான தகவல்களைத் தந்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டார்" என்று தளவாய் சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெங்கடபதி எனக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டி ஜனாதிபதிக்கும், உச்ச நீதிமன்றதலைமை நீதிபதிக்கும் கடந்த 2 ம் தேதி பேக்ஸ் அனுப்பியுள்ளார் தளவாய் சுந்தரம்.
அமைச்சராக உள்ள ஒருவர் வீட்டிலிருந்து இது போன்ற பேக்ஸ் அனுப்பப்படுவது அதிகார துஷ்பிரயோகம், சட்டவிதியையும் மீறுவதாகும் என்று கூறினார் கருணாநிதி.
இது குறித்து திமுக வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்புவார்களா என்று நிருபர்கள் கேட்டபோது,"சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் ஜெயலலிதா இந்தவிஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். வழக்கறிஞர் வெங்கடபதி உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது" என்றார் கருணாநிதி.
பேக்ஸ் செய்தி விவரம்
தமிழக அமைச்சர், உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியின் நகலை செய்தியாளர்களிடம் கருணாநிதிகாட்டினார். அதன் விவரம்:
பேக்ஸ் எண்: 4937698
அனுப்புனர்: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்
நாள்: செப்டம்பர் 2ம் தேதி
நேரம்: 1.15 (பிற்பகல்)
இடம்: சென்னை
செய்தி:
முன்னாள் அட்வகேட் ஜெனரலும், தற்போது டான்சி வழக்கில் அரசு சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞருமானவெங்கடபதி, உச்ச நீதிமன்றத்தின் முன் உண்மைக்குப் புறம்பான அபிடவிட்டை தாக்கல் செய்துள்ளார். இது உச்சநீதிமன்றத்தைத் திசை திருப்பும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டான்சி வழக்கின் ஆவணங்களைப் படிக்க தனக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்றும்,சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வெங்கடபதிமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு ஆவணங்களை படிக்க போதிய கால அவகாசம் தரப்பட்டது. அவருக்கு மேலும் கால அவகாசம்தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் வாதம் முடிந்த பின் அவருக்கு அவகாசம்தரப்படும்.
கருணாநிதியை திருப்திபடுத்துவதற்காக வெங்கடபதி இவ்வாறு செயல்படுகிறார்.
இவ்வாறு அந்த பேக்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications