பேலஸ் எக்ஸ்பிரசில் 57 "வித் அவுட்" பயணிகள்
ஜெய்ப்பூர்:
நாட்டின் மிக வசதி வாய்ந்த ரயிலாகக் கருதப்படும் "பேலஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலில் 57 பேர் டிக்கெட் இல்லாமல்பயணம் செய்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரயிலில் பயணம் செய்யக் கட்டணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். வெளிநாட்டிலிருந்து வரும்டூரிஸ்ட்டுகள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ரயில்வேக்கு பெரும் லாபம் அளித்து வரும் இந்த ரயிலில் சிலர் டிக்கெட் இல்லாமல், ஓசிப் பயணம் செய்துவருகிறார்கள் என்று சிபிஐ நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு வந்த "பேலஸ் எக்ஸ்பிரஸ்" ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீர்ச்சோதனை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள். எந்த நிலையத்திலும் ரயிலை நிறுத்த விடாமல், பயணிகளிடம் தோண்டித்துருவி, சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இச்சோதனையின்போது, 57 பேர் டிக்கெட்டே வாங்காமல் பயணம் செய்ததைக் கண்ட சிபிஐ அதிகாரிகள் பெரும்அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து, விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டுப் பயணிகள் அதிருப்தி
முறையாக டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த 38 பேரில், பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டினர்கள்தான்.
தாங்கள் முறையாக டிக்கெட் வாங்கியும், சிபிஐ அதிகாரிகளின் திடீர்ச் சோதனை காரணமாக, ரயில் நிற்காமல்போனதால், இந்த வெளிநாட்டுப் பயணிகளால் நிறைய சுற்றுலாத் தலங்களைப் பார்க்க முடியாமல் போயிற்று.
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான வெளிநாட்டினர், "இனிமேல் நாங்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவது பற்றிநிறைய யோசிக்க வேண்டியிருக்கும்" என்று மன வேதனையுடன் தெரிவித்தனர்.
வெளிநாட்டினரே டிக்கெட் வாங்கிப் பயணம் செய்யும்போது, பிடிபட்ட 57 பேரும் இந்தியர்கள்தான் என்பதுவேதனைக்குரிய செய்தியாகும்.


Click it and Unblock the Notifications
