உச்ச நீதிமன்றம் செல்வோம்: ஜெ.
சென்னை:
காவிரி நீரைப் பெறுவதற்காக, உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு,"தினந்தோறும் ஒரு டி.எம்.சி. நீரையாவது கர்நாடகம் திறந்துவிட வேண்டும்" என்று கோரும் மனு ஒன்றையும்அவர்கள் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா கூறியதாவது:
காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் தற்போது தேவையான அளவை விட அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. அதாவதுகர்நாடகத்திலுள்ள 4 அணைகளில் 97 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருக்கிறது.
அவர்களுக்குத் தேவைப்படுவதோ 50 டி.எம்.சி. தண்ணீர்தான். அதனால் மீதமுள்ள தண்ணீரை தினமும் ஒருடி.எம்.சி. என்ற அளவில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துமாறு கோரியுள்ளோம்.அவரும் கர்நாடக முதல்வரிடம் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
அவர் பேசிய பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குப் போவதைத்தவிர வேறு வழியே இல்லை என்றார் ஜெயலலிதா.
திங்கள்கிழமை மாலை கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜெயலலிதாகூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications