உ.பி: முலாயம் சிங்கின் 102 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி ஜனதா கட்சியைச் சேர்ந்த 102 எம்.எல்.ஏக்களும்தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
இம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசின் ஆட்சிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு மார்ச்சில்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போது முக்கிய எதிர்க் கட்சியான சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமாசெய்துள்ளதால், விரைவிலேயே சட்டசபையைக் கலைக்க வேண்டிய நிர்பந்தத்தில் பா.ஜ.க. அரசு உள்ளது.
தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட சமாஜ்வாடி கட்சி தனது எம்.எல்.ஏக்களையும் தேர்தல் பணியில்ஈடுபடுத்தியுள்ளது. இப்போது அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், அவர்களை முழு அளவில்பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ராஜ்நாத் சிங் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு அங்கு ஆட்சியில் உள்ளது. நரேஷ் அகர்வாலின் லோக்தந்ரிக்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க. அரசை ஆதரித்து வந்தனர். ஆனால், இந்த ஆதரவுக்காகஇந்தக் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களையும் அமைச்சராக்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க.தள்ளப்பட்டது.
நரேஷ் அகர்வால் உள்பட இந்தக் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்கள் மீதும் கடும் ஊழல் குற்றச்சாட்டுகள்கூறப்பட்டது. இதை கணடுகொள்ளாமல் இருந்து வந்த ராஜ்நாத் சிங் தேர்தல் நெருங்குவதையடுத்து நரேஷ்அகர்வாலையும் சில அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்தார்.
இதனால், பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால், நரேஷ் அகர்வால் கட்சியில் இருக்கும் தாகூர் ஜாதியைச்சேர்ந்த எம்.எல்.ஏக்கள் (முதல்வர் ராஜ்நாத் சிங்கும் இதே ஜாதிக்காரர்) தொடர்ந்து பா.ஜ.கவை ஆதரிக்க ஆட்சிதப்பியது.
நரேஷ் அகர்வால் நீக்கப்பட்டதால், முதலில் பா.ஜ.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி வந்த முலாயம் சிங்யாதவால் தொடர்ந்து ஊழல் குற்றம் சாட்ட முடியவில்லை. இதனால், இப்போது தனது எம்.எல்.ஏக்களை ராஜினாமாசெய்ய வைத்து நெருக்குதல் கொடுத்துள்ளார்.
தேர்தலுக்கு முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து தயாராகி வருகிறார். ஆனால், இன்னும் 6 மாதம் இருப்பதாக நினைத்துதேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தது பா.ஜ.க.
சில தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல்களில் வென்றுள்ள முலாயம் சிங்குக்கு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும்ஆதரவு பெருகி வருகிறது.
யாதவ், முஸ்லீம், தலித் கூட்டணி அமைத்து இருமுறை வென்றவர் முலாயம் சிங் யாதவ். மீண்டும் தனது ஜாதி-மதஅஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.
இவரை சமாளிக்கத் தான் விவசாயிகள் மத்தியில் பேர் பெற்ற அஜித் சிங்கை பா.ஜ.க. சமீபத்தில் தனது கட்சியில்சேர்த்து மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.
தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் அயோத்தி ராமஜன்மபூமி விவகாரத்தையும் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ்.மூலம் நினைவூட்டி வருகிறது பா.ஜ.க.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications