காவிரிப் பிரச்சினை - திமுக வெளிநடப்பு
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்த சில கருத்துக்களுக்கு பதில்அளிக்க சபாநாயகர் காளிமுத்து அவகாசம் கொடுக்காததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் சட்டசபையில்வியாழக்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.
அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சிலவற்றிற்கு திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்குஅதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி எழுந்து சில கருத்துக்களைக் கூற முயன்றார். ஆனால் அவரைபேச விடாமல் அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா எழுந்து, "திமுகவுக்கு காவிரிப் பிரச்சினை குறித்து அக்கறை இல்லை. நான்கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.
அதேபோல, டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும் திமுக சார்பில் முக்கியத் தலைவர்களோ அல்லதுஎம்.பியோ கலந்து கொள்ளவில்லை. இதுதான் திமுக தலைமை காவிரிப் பிரச்சினையில் காட்டும் அக்கறையா?"என்று கேட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்துரைமுருகன் எழுந்தார். ஆனால் சபாநாயகர் காளிமுத்து அவருக்குப் பேச அனுமதி மறுத்து நிதியமைச்சர்பொன்னையனை பேச அழைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள், முதல்வர் கூறிய புகாருக்கு பதிலளிக்க தங்களுக்கு வாய்ப்புதரப்படாததைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறி சட்டசபையை விட்டு வெளியேறினார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications