குடிபோதையில் கலாட்டா.. பஸ்களுக்கு கல்வீச்சு.. 14 பேர் கைது
சென்னை:
சென்னையில் குடித்து விட்டு ஹோட்டலில் சாப்பிட்ட பின் காசு கொடுக்காமல் சென்ற இளைஞர்களுக்கும்,ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் அரசு பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன.
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு கிளம்பியபோது, அவர்களிடம் ஹோட்டல் ஊழியர்கள் சாப்பிட்டதற்கு காசுகேட்டனர். காசு கண்டிப்பாக தர வேண்டுமா என்று அவர்கள் போதையில் கேட்டுள்ளனர். இதையடுத்து,அவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஹோட்டலை விட்டு வெளியே வந்த அந்த இளைஞர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த 4 அரசு பஸ்கள் மீதுகல்வீசித் தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.
அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோக்களையும் அவர்கள் தாக்கினர். இதில் சிலஆட்டோக்கள் சேதமடைந்தன.
சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற ஓட்டேரி போலீஸார் விரைந்து வந்து 15 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications