"ஸ்டாரை" இழுக்கிறார் ப. சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப. சிதம்பரம் விரைவில் அரசியல் கட்சி ஒன்றைத்துவக்குவார் என்று கூறப்படுகிறது. இந்தக் கட்சியில் திரையுலகில் முக்கியமான ஸ்டார் ஒருவர் சேரலாம் என்றும்கூறப்படுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அ.தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டதை எதிர்த்து கட்சித் தலைமையுடன் அதிருப்தி கொண்டு தனி அமைப்பைத் துவக்கியவர் ப.சிதம்பரம்.

இதே சிதம்பரம்தான், 1996ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிவைத்துக் கொண்டதை எதிர்த்து மூப்பனாருடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிறப்பதற்கு முக்கியக்காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

த.மா.காவிலிருந்து சிதம்பரம் நீக்கப்பட்ட பின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பைத்துவக்கினார். இந்த அமைப்பு தற்காலிகமானது என்றும், தேர்தலுக்குப் பின் இது இருக்குமா, இல்லையா என்பதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அது மூப்பனாரின் போக்கைப் பொருத்தது என்றும் சிதம்பரம் அப்போதுகூறினார்.

ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்கள் கழிந்த நிலையில் மூப்பனார் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்து விட்டார்.தற்போது சிதம்பரம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி பெரிதாகியுள்ளது. அவரது அமைதி, ஒருவருக்கும்புரியவில்லை.

இந்நிலையில் தற்போதுள்ள அமைப்பை அரசியல் கட்சியாக்கும் முயற்சியில் சிதம்பரம் தீவிரமாகஇறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்காவான அரசியல் கட்சியாக தனது அமைப்பை மாற்றும் முயற்சியில்சிதம்பரம் தீவிரமாகியிருக்கிறார். அதற்கு முதல் கட்டமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைகளைஇழுக்கும் வேலையில் அவர் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

மூப்பனார் மறைவுக்குப் பின் த.மா.கா. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.மூப்பனார் போன்ற பெரிய தலைவரின் கீழ் பணி புரிந்தவர்கள், அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லாதகோவிந்தவாசனின் தலைமையின் கீழ் செயல்பட யோசிப்பதாக கூறப்படுகிறது. அந்த மாதிரியான எண்ணத்தில்இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க சிதம்பரம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சோ. பாலகிருஷ்ணன், அழகிரி உள்ளிட்ட சிலர் சிதம்பரம் பக்கம் வரலாம் என்ற பேச்சு உள்ளது. இருப்பினும்பெரிய அளவில் தலைவர்கள் யாரும் சிதம்பரத்தின் கட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

பல த.மா.கா. தலைவர்கள் காங்கிரஸ் அல்லது அ.தி.முகவில் சேரும் எண்ணத்தில் இருக்கிறார்கள். இருப்பினும்,கோவிந்தவாசனின் செயல்பாட்டை கொஞ்ச காலம் பார்த்திருந்து விட்டு அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்றயோசனையில் அவர்கள் இருக்கிறார்களாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு நேர்மையான, அப்பழுக்கற்ற கட்சியாக தனது கட்சி இருக்க வேண்டும் என்பதில்உறுதியாக இருக்கிறாராம் சிதம்பரம். எனவே, தனது கட்சி நிர்வாகிகளை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்போகிறாராம். தெளிவான கொள்கை, நேர்மையான நிர்வாகிகள், உண்மையான தொண்டர்கள் என்ற அளவில்சிதம்பரத்தின் புதுக் கட்சி இருக்குமாம்.

இவை எல்லாவற்றையும் விட மிகப் பெரிய செய்தி, திரையுலகில் முக்கியமான ஸ்டாரை தனது கட்சியிக்கு ஆதரவுதெரிவிப்பதோடு மட்டுமல்லாது, கட்சியில் சேர்க்கவும் முயற்சி செய்து வருகிறாராம் ப.சிதம்பரம்.

அந்த நட்சத்திரம் கடந்த காலத்தில் முப்பனாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். சமீப காலமாகமூப்பனாருடன் மனக் கசப்பு கொண்டு அவரைத் தவிர்த்து வந்தவர். அந்த ஸ்டார், தன்னுடன் சேர்ந்தால் தனதுகட்சியின் ஸ்டார் நன்றாக இருக்கும் என்று நம்புகிறாராம் சிதம்பரம்.

எப்படியோ, ஏற்கனவே பல கட்சிகள் மக்களைக் குழப்பிக் கொண்டுள்ள நிலையில், சிதம்பரத்தின் புதுக் கட்சியும்சோர்ந்து விடாமல் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+