உயர்ந்தது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சம்பளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அமைச்சர்கள் ஆகியோருக்கான சம்பள உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்குவரும் என்று தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

வியாழக்கிழமை எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், ஓய்வுகால சலுகைகள் குறித்து கேட்கப்பட்டகேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இந்த அறிவிப்பைஅமைச்சர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கான சம்பள உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருககிறது

எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையில் ரூ.4,000 உயர்த்தப்படுட்டுள்ளது. இதன் மூலம்எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.16,000 ஆக உயரும்.

அமைச்சர்களின் சம்பளம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படுகிறது. உதவி சபாநாயகர், எதிர்க்கட்சிதலைவர், ஆளும் கட்சி கொறடா ஆகியோரின் சம்பளத்தில் ரூ.8,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள்ரூ.17,500 ஆக உயருகிறது.

எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித் தொகையும், ரூ.250லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படுகிறது.

இறந்து போன எம்.எல்.ஏக்களின் கும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.500லிருந்துரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையும் ரூ.2,000லிருந்து ரூ.3,000 ஆகஉயர்த்தப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் கார்கள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து கம்ப்யூட்டரும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+