ஹைடெக் போதைப் பொருள் கடத்தல்... டாக்டர் உள்பட 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீஸார்பறிதல் செய்தனர்.

இதுகுறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னையிலிருந்து பெருமளவில் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாகத் தகவல்வந்ததையடுத்து. அவர்களைக் கையும் களவுமாக பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இதன்படி போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சேத்துப்பட்டு பெட்டுகோலா டவர்ஸ் அருகேபோதைப் பொருள் பரிமாற்றம் நடக்கவிருப்பதாக செய்திகள் வந்தன. இதையடுத்து அப்பகுதியில் மப்டியில்போலீஸார் கண்காணித்து வந்தனர்.

மாலை 4 மணியளவில் ஒரு அம்பாசிடர் காரும், ஒரு மாருதி காரும் வந்து நின்றன. பின்னர் கார்களில் இருந்து சிலர்இறங்கினார்கள். மாருதி காரில் இருந்தவர்கள் ஒரு பெட்டியை எடுத்து வந்து அம்பாசிடர் காருக்கு மாற்றினர்.பின்னர் அந்தக் காரில் ஏறிக் கொண்டனர். கார் புறப்படத் தயாரானபோது, போலீஸார் காரை வழிமறித்துநிறுத்தினர்.

காருக்குள் இருந்தவர்களை வெளியே வரக் கூறி, அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்தனர். பின்னர்,காருக்குள் பெட்டி இருக்கிறதா என்று பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு பெட்டி கிடைக்கவில்லை.

இந்நிலையில் காரில் இருந்த டாக்டர் பிச்சைத்தம்பி என்பவர், "நான் கவுரமாக பணிபுரியும் டாக்டர். நான் எந்தத்தவறும் செய்யவில்லை. தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சியுள்ளார். அப்போது போலீஸார்,"அப்படியானால் பெட்டி எங்கே?" என்று கேட்டுள்ளனர்.

உடனே, டிரைவர் சீட்டுக்கு அருகே இருந்த ஒரு சுவிட்சை டாக்டர் இயக்கினார். அப்போது காரின் பின் சீட்பின்பக்கமாக சாய்ந்தது. சீட்டுக்குக் கீழே ஒரு சிறிய அறை போன்ற பகுதியில் பெட்டி இருந்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த போலீஸாருக்கு வியப்பு ஏற்பட்டது. இப்படியெல்லாம் கூட கடத்துகிறார்களாஎன்று ஆச்சரியப்பட்டனர்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு, பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே ரூ.16கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அப்பெட்டியில் இருந்தது.

இந்தக் கடத்தல் பல காலமாக நடக்கிறதாம். மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை வாங்கி திருச்சிக்கு அனுப்புவாராம் டாக்டர் பிச்சைத் தம்பி. அதை இலங்கைக்கு அனுப்பி விற்பனைசெய்வது பெருமாள் என்பவரின் பொறுப்பாம்.

இந்த சம்பவம் தொடர்பாக, டாக்டர் பிச்சைத்தம்பி, பெருமாள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சங்கர் ஜிவால் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+