ரஷ்யா, இந்தியா, ஈரான் அதிகாரிகள் ரகசிய கூட்டம்
துஷான்பே (தஜிக்கிஸ்தான்):
ஆப்கானிஸ்தானை ஆளும் இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்களுக்கு எதிரான ரஷ்ய, இந்திய, ஈரான் ஆகியநாடுகளின் அதிகாரிகள் தஜிக்கிஸ்தானில் வியாழக்கிழமை ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அகமத் ஷா மசூத் தலைமையில் போராடி வரும் ஆப்கானிஸ்தானின் போராட்டக் குழுவுக்குரஷ்யா, இந்தியா, ஈரான் ஆகியவை ஆதரவளித்து வருகின்றன. தலிபான் தீவிரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்குடியரசுத் தலைவர் புர்ஹானுதீன் ரப்பாணிக்கு இந்தியா தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.
தலிபான்களை எதிர்த்துப் போராட அகமத் ஷா மசூதுக்கு ரஷ்யா ஆயுதங்கள் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தலிபான் தீவிரவாதிகள் டி.வி. நிருபர்கள் வேஷத்தில் சென்று அகமத் ஷா மசூத் மீது வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவர் தஜிக்கிஸ்தானில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலைமோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தலைமயிலான தலிபான் எதிர்ப்புப் படையின் எதிர்காலம்கேள்விக்குறியாகிவிட்டது.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க ரஷ்ய, இந்திய, ஈரான், தஜிக்கிஸ்தான் நாட்டுவெளியுறவுத்துறை அதிகாரிகள் ரகசிய கூட்டம் நடத்தினர். தஜிக்கிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நேற்று இக் கூட்டம்நடந்தது.
அமெரிக்காவில் பின் லேடன் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications