மகனை சேலம் மாநகராட்சி மேயராக்க ராமதாஸ் முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தி.மு.க கூட்டணியில் மீண்டும் சேர பாட்டாளி மக்கள் கட்சி சில நிபந்தனைகளைவிதித்துள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கூட்டணி என்று அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்படைத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில்அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தது.

அதுவரை தி.மு.க. கூட்டணியில் முக்கியக் கட்சியாக திகழ்ந்த பாட்டாளி மக்கள் கட்சிவிலகியதால் தி.மு.க கூட்டணிக்கு தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டே மாதங்களில் அந்தக்கூட்டணியிலிருந்தும் விலகியது.

பின்னர் மீண்டும் திமுக இருக்கும் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தது. ஆனால் திமுககூட்டணிக்கு வரவில்லை என்றது.

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தற்போது தி.மு.க கூட்டணியில்மீண்டும் சேர முயன்று வருகிறது. ஆயினும், தாமாக போய்ச் சேர்ந்தால் மரியாதையாகஇருக்காது. தி.மு.க அழைத்த பிறகு போய்ச் சேரலாம் என்று கூட்டணியில் இணையும்முடிவை ராமதாஸ் ஒத்திவைத்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் தி.மு.க கூட்டணியில் சேருவதை புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு தலித் கட்சிகளுமே விரும்பவில்லை.குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்தக் கட்சிகளை பகைத்துக் கொள்ள தி.மு.க தலைமையும் விரும்பவில்லை. காரணம்,நெருக்கடியான நேரத்தில் கை கொடுத்த இந்தக் கட்சிகளை கூட்டணியிலிருந்துவெளியேற்ற தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மனமில்லை.

அது மட்டுமல்லாமல், பா.ம.க.மீண்டும் கூட்டணிக்கு வருவதை பாரதீய ஜனதாக் கட்சிமட்டுமே முழு மனதுடன் ஆதரிக்கிறது. பிறகட்சிகளுக்கு இதில் முழுமையான விருப்பம்இல்லை.

பா.ஜ.க. குழு- ராமதாஸ் சந்திப்பு:

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் தி.மு.க கூட்டணியில் சேர்க்கும்முயற்சியில் பாரதீய ஜனதாக் கட்சி ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள்கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை அவரது தைலாபுரம் இல்லத்தில் சென்று பா.ஜ.க.குழுவினர் சந்தித்தனர்.

பொன்.ராதாகிருஷ்ணன், கிருபாநிதி மற்றும் ராஜா ஆகியோர் அடங்கிய இந்தக் குழுராமதாஸுடன் மனம் விட்டுப் பேசியது. மீண்டும் தி.மு.க கூட்டணிக்கு வந்தால் நிச்சயம்உரிய மரியாதை அளிக்கப்படும் என்று அவர்கள் ராமதாஸிடம் உறுதியளித்துள்ளனர்.அவர்கள் கூறுவதையெல்லாம் பொறுமையாக கேட்ட ராமதாஸ் தி.மு.க குறித்து குதறித்தள்ளி விட்டாராம்.

கூட்டணிக் கட்சிகளை தி.மு.க தலைமை எப்படி நடத்துகிறது, வேண்டியபோது தூக்கிவைத்துக் கொண்டாடுவது, தேவையில்லை என்று உணரும்போது அவமானப்படுத்திவெளியேற்றுவது ஆகியவைதான் தி.முக கூட்டணியில் தான் சேர தடைகளாகஉள்ளவை என்று ராமதாஸ் கூறியதாகத் தெரிகிறது.

மேலும், வாழப்பாடி ராமமூர்த்தியை வைத்துக் கொண்டு தன்னை எப்படியெல்லாம்தி.மு.க தலைமை அவமதித்தது என்பதை விலாவாரியாக பா.ஜ.க. குழுவினரிடம்விளக்கிய ராமதாஸ், அதையெல்லாம் தான் மறந்தாலும் கூட தனது கட்சியினர் மறக்கமாட்டார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அ.தி.மு.க கூட்டணிக்கு நாங்கள் போனதை சந்தர்ப்பவாதம் என்று தி.மு.கவும் அதன்கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தின்போது கூறின.

ஆனால், கருணாநிதி கைது செய்யப்பட்டது, அதன்பிறகு தி.மு.கவினர் பழிவாங்கப்பட்டதையடுத்து அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் பழி வாங்கும்நோக்கத்தோடுதான் எங்களையும், ம.தி.மு.கவையும் தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி துடிக்கிறார். இதற்குப் பெயர் சந்தர்ப்பவாதம் இல்லையா? என்றும்கேட்டுள்ளார் ராமதாஸ். இதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்தப் பதிலையும் தரமுடியவில்லையாம்.

ராமதாஸை அமைதிப்படுத்திய பா.ஜ.க. தலைவர்கள் இம்முறை அப்படி நேராது,நீங்கள் வெளியேறியதால் ஏற்பட்ட இழப்பை தி.மு.க தலைவர் கருணாநிதி புரிந்துகொண்டுள்ளார். எனவே இம்முறை நிச்சயம் அதுபோன்ற நிலைமை உருவாகாது என்றுராமதாஸிடம் கூறியுள்ளனர்.

பா.ஜ.கவினரின் சமாதானத்தால் ஓரளவு அமைதியடைந்த ராமதாஸ், உள்ளாட்சித்தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் சேருவதாக வைத்துக் கொண்டாலும் கூட தனதுகட்சியினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அதுகுறித்து யோசிக்கலாம்என்று பா.ஜ.க. குழுவினரிடம் கூறியதாகத் தெரிகிறது.

அதாவது, சேலம் மாநகராட்சி மேயர் பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும், வடமாவட்டங்களில் கணிசமான அளவில் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.

இவற்றை செய்வதாக இருந்தால் கூறுங்கள், நானே கருணாநிதியைச் சந்தித்துகூட்டணியில் இணைந்து கொள்கிறேன். எனது கட்சியினரை பிறகு சமாதானப்படுத்திக்கொள்கிறேன். இதில் எந்தத் தயக்கமும் எனக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியதாகத்தெரிகிறது.

இதைக் கேட்ட பா.ஜ.க. குழுவினர் இதுகுறித்து தி.மு. தலைவர் கருணாநிதியுடன் பேசிமுடிவு சொல்வதாக கூறியுள்ளதாகத் தெரிகிறது.

சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் தனது மகன் அன்புமணியை நிற்க வைக்கராமதாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதை மனதில் வைத்தே சேலம் மேயர்பதவியைக் கேட்கிறது பா.ம.க. இதன் மூலம் அன்பு மணியை பதவியுடன் கூடியதலைவராக உலவ வரச் செய்யலாம் என்பது ராமதாஸின் கணிப்பு.

ராமதாஸுடன் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு திருப்திஏற்பட்டுள்ளதாகவே பா.ஜ.க.தலைவர்கள் கருதுகிறார்கள். அடுத்த கட்டப்பேச்சுவார்த்தையில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதேபோல, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவையும் அடுத்து இவர்கள்சந்திக்கவுள்ளார்கள். இரு கட்சிகளையும் உள்ளாட்சித் தேர்தலின்போது தங்களதுகூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி உறுதியாகவும,வேகமாகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+