3 நாட்களுக்குள் பின் லேடனை ஒப்படைக்காவிட்டால் ஆப்கன் மீது தாக்குதல் - அமெரிக்கா
டெல்லி:
அடுத்த 3 நாட்களுக்குள் ஒசாமா பின் லேடனை ஆப்கானிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காகாலக்கெடு விதித்துள்ளது. "அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்"என்றும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு பின் லேடன்தான் காரணம் என்றுஅமெரிக்கா உறுதியாகக் கூறிவிட்டது. ஆனால், பின் லேடனும் ஆப்கனின் தலிபான் அரசும் தொடர்ந்து இதைமறுத்து வருகின்றன.
இதற்கிடையே, ஆப்கன் மீது போர் தொடுக்க அமெரிக்கா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டது.
பாகிஸ்தானின் அனுமதியோடு, அந்நாட்டில் போர் விமானங்களையும், படைகளையும் குவிக்க ஆரம்பித்துள்ளதுஅமெரிக்கா.
இதையடுத்து, ஆப்கன் மக்கள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். மேலும், ஆப்கனில் உள்ள வெளிநாட்டு மக்கள்அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு மக்கள் வெளியேறியதைத் தவிர, ஆப்கனைச் சேர்ந்த ஏராளமான மக்களும் பாகிஸ்தானில்அகதிகளாகத் தஞ்சம் அடைந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், பின் லேடனைக் காப்பாற்றும் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தலிபான் அரசுகூறிவிட்டது.
இதையடுத்து, அமெரிக்காவும் ஆப்கனுக்கு காலக்கெடு விதித்துள்ளது. "பின் லேடனை இன்னும் 3 நாட்களுக்குள்எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்" என்று அமெரிக்காகடுமையான எச்சரிக்கையும் காலக்கெடுவும் விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications