இந்தியா, இஸ்ரேல் தலையிடக் கூடாது - பாக். நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் தாக்குதலில் இந்தியா, இஸ்ரேல் தலையிடக் கூடாது என்று பாகிஸ்தான்அமெரிக்காவிடம் கூறியுள்ளது.
பின் லேடனை இன்னும் 3 நாட்களுக்குள் ஒப்படைக்கவில்லை என்றால், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நிச்சயம்என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. "இந்தப் புனிதப் போருக்கு நாங்கள் தயார்" என்று ஆப்கனும் பதிலடிகொடுத்துள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் அனுதமதியோடு, அமெரிக்கா தன் போர் விமானங்களை பாக்.-ஆப்கன் எல்லைப்பகுதிகளில் குவித்து வருகிறது.
தன் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கூறியுள்ள பாகிஸ்தான்,இந்தத் தாக்குதல் விஷயத்தில் இந்தியாவோ அல்லது இஸ்ரேலோ தலையிடக் கூடாது என்றும் அமெரிக்காவிடம்கூறியுள்ளது.
மேலும், தங்களுடைய வான்வெளிப் பகுதியை மட்டுமே அமெரிக்கப் படைகள் பயன்படுத்த வேண்டும் என்றும்பாகிஸ்தான் அமெரிக்காவிடம் உறுதியாகக் கூறியுள்ளது.
தரைவழித் தாக்குதலை அமெரிக்கா நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதை பாகிஸ்தான்அமெரிக்காவிடம் தெளிவாகக் கூறிவிட்டது.


Click it and Unblock the Notifications
