காவிரி பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதனால், காவிரியில் தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்திடம் கோரிக்கை விடுத்தது. ஆனால்,கர்நாடகம் அதற்கு மறுக்கவே, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் செய்து, அக்கூட்டத்திலும் தமிழகம்முறையிட்டுப் பார்த்தது.
அதற்கும் கர்நாடகம் மறுத்துவிட்டதையடுத்து, தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று கூடி, பிரதமர்வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து, கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று வலியுறுத்த வேண்டிக் கொண்டனர்.
மேலும், அவர்கள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடமும் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால், தமிழகத்தின்அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன.
இதற்கிடையே, கர்நாடகமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாதுஎன்று முடிவெடுக்கப்பட்டது. அவர்களும் வாஜ்பாயிடம் இதைத் தெளிவாகக் கூறிவிட்டனர்.
இந்நிலையில், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம்எழுதினார் ஜெயலலிதா. ஆனால் இந்தக் கடிதத்திற்கும் இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை.
தமிழகம் மேற்கொண்ட முயற்சிகளில் எந்தவிதப் பலனும் இல்லாமல் போன நிலையில், ஜெயலலிதா தலைமையில்தமிழக அமைச்சரவை இன்று கூடியது.
கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால், காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரஇக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இவ்வழக்கில், மத்திய அரசையும் கர்நாடக அரசையும் பிரதிவாதியாகச் சேர்ப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பாக, அட்டார்னி ஜெனரலுடன் ஆலோசனை நடக்கப் போவதாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications