தனித்துப் போட்டியிடுகிறது ப.சிதம்பரத்தின் கட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ஏற்படாத நிலையில் தனித்துப் போட்டியிடப் போவதாக ப.சிதம்பரத்தின் காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை கட்சி அறிவித்துள்ளது.

இக்கட்சியின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம், திமுக தலைவர் கருணாநிதியுடன் இடப் பங்கீடு தொடர்பாக நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல்தான் என்பதால் இதனால் வருத்தமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.

காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அவர்களிடமிருந்து அழைப்பு வந்தால் அவர்களுடன்இணைந்து மூன்றாவது அணி அமைப்பது குறித்து யோசிப்போம்.

கட்சியின் செயற்குழு அவசரமாக வியாழக்கிழமை கூட்டப்பட்டுள்ளது. அப்போது கட்சியின் நிலைப்பாடு குறித்துமுடிவெடுப்போம் என்றார் அவர்.

இதற்கிடையில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை என்று செய்தி வெளியானவுடன், சிதம்பரம்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போகிறது என்றும். அதற்காக ரெங்கநாதன் எம்.எல்.ஏ., செங்கோட்டையனைச்சந்திக்கச் சென்றுள்ளார் என்றும் வதந்தி பரவியது.

ஆனால் நேற்று மாலை சிதம்பரம் கருணாநிதியைச் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்தவுடன் அந்த வதந்திஅடங்கியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற