அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர்
சென்னை: அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்த நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் அணியிலிருந்து வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்து தலைமைச் செயலகத்தில் வைத்தே உறுப்பினர் அட்டையையும் பெற்றனர். இதனால், எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். எம்எல்ஏ பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துள்ள நிலையில், கைப்பட கடிதம் எழுதித் தருமாறு சபாநாயகர் கேட்டதையடுத்து, அவர் கடிதத்தை எழுதிக் கொடுத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெற தவெக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த சூழலில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் தவெகவின் ஆதரவு பலம் 120 ஆக உயர்ந்தது. இதையடுத்து தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வராக பதவியேற்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எஸ்.பி.வேலுமணி சிவி சண்முகம் அணியைச் சேர்ந்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பும், சி.வி.சண்முகம் தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி சபாநாயகரிடம் தகுதி நீக்க மனுக்களை அளித்தனர்.
இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைக்கப்பட்டு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே தலைமைச் செயலகத்தில் வைத்தே அவர்கள் தவெகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் கூட அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகினது. இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்துக்கு வந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதித் தருமாறு கேட்டதையடுத்து, அவரது முனனிலையில் இசக்கி சுப்பையா கைப்பட எழுதிக் கொடுத்தார்.
-
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
சண்டைக்கு ரெடியாக திமுக.. சட்டசபையில் சமாளிக்குமா தவெக? எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி தொடக்கம் -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications