அமெரிக்கா-பாக். இணைந்து பின் லேடனைப் பிடிக்க முடிவு
இஸ்லாமாபாத்:
நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் தாக்கப்பட்டதற்குக் காரணமான சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனைப் பிடி"ப்பதற்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடிவெடுத்து, பாகிஸ்தானின் ஆதரவைக் கோரிய போது, வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே முதலில் அமெரிக்காவுக்கு அனுமதியளித்தது பாகிஸ்தான்.
ஆனால், பின்னர் தரை வழித் தாக்குதல் நடத்துவதற்கும் அனுமதி அளித்த பாகிஸ்தான், ஆப்கனைத் தாக்குவதற்குதன்னுடைய துருப்புக்களைத் தரப் போவதில்லை என்று கூறிவிட்டது.
இருப்பினும், பதுங்கியுள்ள பின் லேடனைக் கண்டுபிடிக்க, அமெரிக்காவுக்குத் தோள் கொடுக்கப் போகிறதுபாகிஸ்தான்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பின் லேடன் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகள்ஆப்கனைத் தாக்கும் பட்சத்தில், அங்கிருந்த படி, அவரே தலிபான் படைகளுக்குத் தலைமை தாங்கி பதில் தாக்குதல்நடத்துவார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், பின் லேடன் எங்கு இருக்கிறார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. அவர் மறைந்துள்ளஇடத்தைக் கண்டுபிடித்து, அவரைப் பிடிக்கவோ அல்லது கொன்று விடவோ அமெரிக்க-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆப்கனில் பின் லேடன் பதுங்குவதற்கு சாத்தியக்கூறாக உள்ள இடங்கள் பற்றி, பாகிஸ்தான் உளவுத்துறை பலதகவல்களை அமெரிக்காவுக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடங்களில்தான் அமெரிக்கா முக்கியத் தாக்குதல்களை நடத்த உள்ளது.


Click it and Unblock the Notifications
