கோயம்புத்தூர்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், பருத்தி நகரம், இந்தியாவின் செலவு ஜாஸ்தியான நகரங்களில் ஒன்று, தமிழகத்தின் பெங்களூர் என பல பெயர்களை வைத்துக்கொண்டுள்ள கோயம்புத்தூர், தமிழகத்தில் மூன்றாவது பெரிய மாநகராட்சி என்ற பெயரைப் பெற்றது.
தமிழகத்தில் சென்னை, மதுரைக்குப் பிறகு மூன்றாவதாக மாநகராட்சி அந்தஸ்து பெற்ற நகரம் கோவை மாநகரம் ஆகும். ஆனால் 1996ம்ஆண்டுதான் கோவை மாநராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
96-ல் நடந்த முதலாவது தேர்தலில் கோவை மாநகர மேயராக வி.கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார் கோபாலகிருஷ்ணன்.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 72 வார்டு கவுன்சிலர்கள் உள்ளன. இவர்களில் 48 பேர் ஆண்கள் மற்றும் 24 பேர் பெண்கள். இங்கு மொத்தம் 7நிலைக்குழுக்கள் உள்ளன. மொத்தம் 4 மண்டலங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்குமண்டலங்கள் ஆகும்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கோவை மாநகராட்சி மேயராக உள்ள கோபாலகிருஷ்ணன் சாதாரண நபர் இல்லை. மிகப் பெரிய தொழிலதிபர். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தஅவர் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த பின் அக்கட்சியில் சேர்ந்தார்.
கடந்த 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது மேட்டுப்பாளையம் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் அதுவரைதிமுக அல்லது அதிமுக வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள். ஆனால் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒருவர் வெற்றி பெற்றார்.அதுவும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி சேராமல் போட்டியிட்டது.
கோவை நகரின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ள கோபாலகிருஷ்ணன், தனது ஐந்து ஆண்டு கால மேயர் பதவிக்காலத்தில் கோவை நகருக்கு பலநல்ல திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது.
ஆனால் ஒரே பாதகமான அம்சம், தமாகாவைச் சேர்ந்த சில பெண் கவுன்சிலர்கள் கட்சிக்கு எதிராகவும், மேயருக்கு எதிராகவும் செயல்பட்டுவந்ததுதான். இது கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இது உள்ளாட்சித் தேர்தலிலும்எதிரொலிக்கலாம் என்று அதிமுக தரப்பு கருதுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த முறை மேயர் தேர்தலில் அதிமுகவே களத்தில் இறங்கியுள்ளது.
அதேசமயம், பாரதீய ஜனதாக் கட்சியும் மேயர் தேர்தல் களத்தில் குதிக்கிறது. மேயர் தேர்தலில் முதல் முறையாக பாரதீய ஜனதாக் கட்சிபோட்டியிடுகிறது. கோவை மாவட்டத்தில் பா.ஜ.கவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளதால், அதை வைத்து மேயர் தேர்தலில் வெற்றி பெற்று விடுவதுஎன்று முடிவு செய்துள்ளது பா.ஜ.க.
கோவையை பறிக்கப் போவது அதிமுகவா அல்லது பா.ஜ.க.வா என்பதை அக்டோபர் 16ம் தேதி நடக்கும் வாக்குப்பதிவு முடிவு செய்யும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications