பாகிஸ்தானை ரசாயன ஆயுதங்களால் தலிபான்கள் தாக்கலாம்: அமெரிக்கா எச்சரிக்கை

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் மீது தலிபான் தீவிரவாதிகள் உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தலாம் எனஅமெரிக்கா எச்சரித்துள்ளது. இதையடுத்து தாக்குதலை எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராகி வருகிறது.

ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுக்க பாகிஸ்தானின் விமான தளங்களைப் பயன்படுத்த உள்ளது. இதனால்பின் லேடன் மற்றும் தலிபான்களின் கோபம் பாகிஸ்தான் மீதும் திரும்பியுள்ளது.

மேலும் இந்தப் போரின் போது தலிபான்கள் அமெரிக்காவிற்கு உதவும் நாடுகள் மீது உயிரியல் மற்றும் ரசாயனஆயுதங்களால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆபத்து பாகிஸ்தானுக்கு அதிகம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அமெரிக்க ராணுவ அதிகாரிகள்பாகிஸ்தானுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள 2 பெரிய ராணுவ ஆராய்ச்சி மையங்களில், இதுபோன்ற உயிரியல், ரசாயனதாக்குதலை எதிர்கொள்ள தடுப்பு மருந்துகள் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இதற்காக அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் 1 மில்லியன் டாலர் உதவித் தொகை அளிக்கும்படிகேட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார நிறுவனத்திடமும் நிதியுதவி அளிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் தற்போது தன்னிடம் உள்ள தடுப்பு மருந்துகளை வைத்து, உயிரியல், ரசாயன ஆயுதங்கள்தாக்குதலை சமாளிக்க முடியுமா என்று பல சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற