பாண்டிச்சேரி முதல்வர் பதவிக்கு ஆபத்து
சென்னை:
பாண்டிச்சேரி முதல்வராக உள்ள ப.சண்முகத்தை மாற்ற காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்துஅங்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ், அதிமுக கூட்டணி ஆட்சி உள்ளது. முதல்வராக ப.சண்முகம் உள்ளார். அவர் தற்போது எம்.எல்.ஏவாகஇல்லை. ஆறு மாதத்திற்குள் அவர் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
ஆனால் அவர் போட்டியிடுவதற்கு வசதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் ராஜினாமா செய்ய முன் வரவில்லை. இதையடுத்துஅதிமுக எம்.எல்.ஏக்களிடம் கூட சண்முகம் கேட்டுப் பார்த்தார். ஆனால் அவர்களும் முன் வரவில்லை. இந்த சிக்கலால் சண்முகம்பதவியில் நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த சிக்கல் போதாது என்று மேலும் இரண்டு புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன. தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அதிமுககூட்டணியிலிருந்து விலகி விட்டது. அது தற்போது பாண்டிச்சேரியிலும் எதிரொலிக்க உள்ளது.
காங்கிரஸ் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாவிட்டாலும் கூட அரசுக்குத் தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவுசெய்துள்ளது. அப்படிச் செய்தால் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தை இழந்து விடும். அப்படி நடந்தால் சண்முகம் ஆட்சியைஇழப்பார்.
அதேபோல, சண்முகத்திற்காக யாராவது ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய முன் வந்தாலும் கூட காங்கிரஸின் பலம் 15ஆக குறையும், எதிர்க்கட்சியினரின் ஒட்டு மொத்த பலம் 15 ஆக உள்ளது.
இதனால் அந்த நேரத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவும் எதிர்க்கட்சியினர்தயாராக உள்ளனர்.
இந்த புதிய சிக்கல்களைத் தவிர்க்க எம்.எல்.ஏவாக உள்ள ஒருவரை புதிய முல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.எனவே முதல்வர் பதவிக்கு இப்போதே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வியூகம் வகுக்கத் தொடங்கி விட்டனர்.
அதில் முதல் வரிசையில் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் ஆகியோர் உள்ளனர்.இவர்களில் நாராயணசாமி தற்போது எம்.எல்.ஏவாக இல்லை.
இருப்பினும் மாநில காங்கிரஸ் தலைவர் என்பதால் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. வைத்தியலிங்கம் மீது லஞ்சம்கொடுக்க முயன்றதாக சி.பி.ஐ. வழக்கு உள்ளதால் அவருக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
இருப்பினும் இப்போதைக்கு ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பதால் இப்போதைக்குவைத்தியலிங்கத்தை முதல்வராக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதேசமயம், முதல்வர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டு தோல்வியுற்ற ரங்கசாமியும் மீணடும் முதல்வர் பதவியைக் குறிவைத்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்னும் சில நாட்களில் பாண்டிச்சேரி அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications