பின்லேடனை ஒப்படைக்க முடியாது: தலிபான் திட்டவட்டம்
துபாய்:
விமானத் தாக்குதலில் பின் லேடனுக்கு தொடர்பிருப்பதாக தகுந்த ஆதாரங்களை காட்டினாலும் கூட அவரைஅமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இதனால் அமெரிக்கா நிச்சயம் ஆப்கானிஸ்தானைத் தாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆனால் பின் லேடன் தான் காரணம் என்றால் அதற்குத் தகுந்த ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என்றுபாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவை வற்புறுத்தின. இந்நிலையில் அமெரிக்கத் தாக்குதலில் பின்லேடனின் பங்கு இருப்பதற்கான ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடமும் ரஷ்யாவிடமும் அமெரிக்கா காட்டியுள்ளது.
ஆனால் ஆதாரங்களைக் காட்டினாலும் பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று தலிபான்அரசு இப்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான தலிபான் தூதர் அப்துல் சலாம் சயீப், துபாயில்வெளியாகும "அல்- கலீஜ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
அமெரிக்கத் தாக்குதலில் பின் லேடனின் பங்கு குறித்து தகுந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டாலும், நாங்கள்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்.
அவ்வாறு லேடன் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவரை இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில்தான் விசாரணைசெய்வோம். விசாரணயிைல் அவரது தொடர்பு உறுதி செய்யப்பட்டால், அதன் பிறகு என்ன செய்யலாம் என்றுமுடிவெடுப்போம்.
மேலும் பேச்சுவார்த்தை மூலமாகத் தான் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கமுடியும். போர் என்று ஆரம்பித்தால்அதனால் பாதிக்ககப்படப் போவது அமெரிக்காதான் என்றார்.
இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில், பின் லேடனை மறைத்துவைத்துள்ள தலிபான்களுடன் இனிமேல் ஆலோசனை, பேச்சுவார்த்தைஎன்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications