தேர்தலுக்குப் பின் த.மா.கா பிளவு நிச்சயம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சிக்கு மாற பல த.மா.கா. பிரமுகர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலின்போது மூப்பனாரின் போக்கு பிடிக்காமல் பலதலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். நிச்சயம் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்பட்ட தென்காசி, சேரன்மாதேவி,ராதாபுரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலை தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. ஆனால் இப்போது பிரச்சினை வேறு மாதிரியாக இருக்கிறது.உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 155 வார்டுகளில் தமாகாவுக்கு 39 வார்டுகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்குதான் பிரச்சினை எழுந்தது. அறிவிக்கப்பட்டநான்கு, ஐந்து பேரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் மேலிடத் தலைவர்கள் சிலரின் பரிந்துரையின் பேரில்தான் சீட்கொடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பரிந்துரைக்குப் பின்னணியில் ரூ.2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. தங்களுக்குவேண்டியவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டை அவர்களுக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டமேலிடத் தலைவர்கள் பட்டியலில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி, தனுஷ்கோடி ஆதித்தன்,பாரமலை ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே இதுபோல பணத்திற்கு சீட்டை விற்றது துவங்கி விட்டது என தமிழ் மாநில காங்கிரஸின்இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு இந்தத் தலைவர்கள் குறித்துத் தெரியாமல்போய் விட்டதால் ஏமாந்து விட்டார் என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.
இந்த நிலையில், தமாகாவின் முக்கியப் பிரமுகர்களான வடசென்னை தலைவர் ஜோதி, தென் சென்னை தலைவர் விஜயன், மண்டலபிரசார செயலாளர் முனவர் பாட்சா ஆகியோர் கட்சியிலிருந்து விலகி விட்டனர். தாங்கள் கட்சியை விட்டு விலகியதற்கு வாசனைச்சுற்றிலும் உள்ள சில மூத்த தலைவர்களே காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மூப்பானர் மருத்துமவனையில் இருந்தபோது அவரை செயல்பட விடாமல் முடக்கிய இவர்கள் இப்போது வாசனையும் தங்களதுகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது கவுன்சிலர் தேர்தலில் சீட் கிடைக்காத சிலர் போட்டி வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துபோட்டியிடுகின்றனர். தேர்தல் முடிந்ததும் அதிருப்தியில் உள்ள பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவ முடிவுசெய்துள்ளதாகவும் அந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் கூறுகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications