கிரிக்கெட்: தென் ஆப்ரிக்காவிடம் இந்தியா தோல்வி
ஜொகானஸ்பர்க்:
முத்தரப்பு ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 6விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, கென்யா பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள்கிரிக்கெட் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை), வான்டரார் விளையாட்டரங்கில்தொடங்கியது.
துவக்க ஆட்டத்தில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின.
இந்தியா முதலில் பேட் செய்தது. சமீப காலமாக இரட்டை இலக்க ஸ்கோரை அடிக்கவேமிகவும் சிரமப்பட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கடுமையான விமரிசனத்திற்கும்உள்ளான இந்திய கிரிகெட்அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மிக பிரமாதமாகவிளையாடி 127ரன்கள் குவித்தார்.
வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக இலங்கைக்கு எதிரானபோட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ் மேன்சச்சின் டெண்டுல்கர் 101 ரன்கள் குவித்தார்.
சச்சின் டெண்டுல்கர் வழக்கமான அவரது அதிரடி ஆட்ட பாணியை மாற்றிக்கொண்டார். தற்போது இவர் எடுத்துள்ள சதம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர்எடுத்துள்ள 30வது சதமாகும்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள்எடுத்தது.
280 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா துவக்கம்முதலே சிறப்பாக ஆடியது.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது என்று கூற முடியாது.தென்னாப்பிரிக்காவினர் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சுலபமாக சந்தித்துரன்கைள குவித்தனர்.
தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் காரி கிரிஸ்டன் 133 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இறுதியில் 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துதென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications