தமிழகத்தில் கடும் மழை
சென்னை:
தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்தது.
சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குத்துவங்கிய மழை காலை 9 மணி வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
தென் மேற்குப் பருவ மழை வலுத்து வருவதாலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தமண்டலம் உருவாகியிருப்பதாலும் தமிழகத்தின் பல பகுதிகள், சென்னை,பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
ஆனால் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் சென்னையில் வானம் இருண்டது.மாலை 5 மணிக்கு மேல் லேசான மழை பெய்யத் தொடங்கியது. ஆனால் அரை மணிநேரத்திலேயே அது கன மழையாக மாறியது. தொடர்ந்து பெய்து வந்த மழைஓய்வதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இரவு ழுவதும் மழை பெய்து கொண்டேஇருந்தது.
காலையிலும் மழை நீடித்தது. 9 மணி வரையிலும் மழை நின்றபாடில்லை. கிட்டத்தட்ட14 மணி நேரமாக பெய்து வரும் இந்த மழையால் சென்னை முழுவதும் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிகாணப்படுகிறது.
பல இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிலஇடங்களில் சாலையோர மரங்கள் கீழே விழுந்து விட்டன.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் (புயல் சின்னம்) உருவாகியிருப்பதால்மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதுமே மிக பலத்த மழை தொடர்ந்து பெய்துவருகிறது
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications