காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒழிப்போம்: டோனி பிளேர்
டெல்லி:
காஷ்மீர் தீவிரவாதத்தையும் எதிர்த்து போர் தொடுக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறினார்.
தீவிரவாதத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுக்கவுள்ள போருக்கு இந்தியாவின் ஆதரவுதிரட்ட இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியா வந்துள்ளார்.
அவர் இன்று (சனிக்கிழமை) காலை பிரதமர் வாஜ்பாயைச் சந்த்தித்துப் பேசினார். அப்போது, உலகம் முழுவதும்உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும் என்றஇந்தியாவின் நிலையைப் பாராட்டினார்.
மேலும் சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலுக்கு கடும்கண்டன்ம் தெரிவித்தார்.
பிறகு பிரதமர் வாஜ்பாயும், பிளேரும் இணைந்து நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பாகிஸ்தான்ஒருபுறம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தருகிறது, மறுபுறம் காஷ்மீரில்எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்பதைப் பற்றிக் கேட்டதற்கு பிளேர்கூறியதாவது,
முதலில் காஷ்மீர் கோரத் தாக்குதலில் பலியானாவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு நாகரீகமான மக்கள் வாழும் நாடுகளில்இடமில்லை. மேலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கூறுகையில்,
தீவிரவாதத்திற்கு எதிரான போரின் போது, சில நாடுகள் தங்கள் நடத்திவரும் தீவிரவாதத்தைக் கொண்டு தங்கள்சொந்த பிரச்சனைகளைத் தீர்க்க முயலலாம். இந்த விஷயத்தில் இந்திய அரசு உஷாராக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பிளேருடன் பேசும்போது, இந்த உலகில் நாடுகளுக்கு இடையிலான தூரமும்,நேரமும் தீவிரவாதத்தைப் பாதுகாக்கும் காரணிகளாக இருக்கமுடியாது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானம் காத்மண்டுவிலிருந்து காண்டகருக்கு கடத்தப்பட்டது. தற்போதுஅதே தீவிரவாதம் அமெரிக்காவில் பெரிய நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டுக்குக்குமே தொடர்புள்ளதுஎன்பதை அமெரிக்கா உணர வேண்டும்.
இதன் மூலம் நாம் ஏன் தீவிரவாதத்தை உலகலாவிய பிரச்சனையாகக் கருதவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.ஒரு இடத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீவிரவாதம் மற்றொரு இடத்தில் பெரியதாகி தனது விஷமத்தைக்காட்டலாம் என்றார்.
இதை பிரிட்டிஷ் பிரதமர் ஆமோதித்தார். மேலும் இருவரும் இஸ்லாத்தையும், தீவிரவாதத்தையும்தொடர்புபடுத்திப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர் ஜஷ்வந்த் சிங், தேசிய பாதுகாப்புக் குழுஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் வெளியுறவுச் செயலாளர் கோகிலா ஐயர் ஆகியோர் உடன் இருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications