ஆண்களும் பெண்களும் சேர்ந்து குடித்தனர்
சென்னை:
கள்ளச் சாராயம் அருந்திய அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த சாராயத்தைக் குடித்துள்ளனர். வழக்கமாக இங்கு ஆண்களும்பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து குடிப்பது உண்டு என அப் பகுதியினர் தெரிவித்தனர்.
இதை காவல்துறையினர் கண்டும் காணமலும் இருந்துள்ளனர்.
நேற்று இரவும் வழக்கம்போல் குடித்தனர். குடித்தவுடன் பலருக்கும் வயிற்று வலி ஏற்பட்டது. துடித்த அவர்கள் ரத்த வாந்தி எடுக்கஆரம்பித்தனர். இதையடுத்து அவர்களை உறவினர்கள் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
ஆனால், பலரும் மிக மோசமான நிலையில் தான் கொண்டு வரப்பட்டனர். அங்கு தரப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.
இந்த சாராயம் குடித்து இறந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
உயிரிழந்த கூலித் தொழிலாளி மகாலிங்கம் என்பவரின் மனைவி கூறுகையில், நேற்று மாலை வேலைக்குப் போய் திரும்பிய என்கணவர் நேராக சாராயம் விற்கும் இடத்துக்குப் போனார். குடித்து விட்டு வந்தவர் வயிறு வலிக்கிறது என்றார்.
அவரை மருத்துவமனைக்கு போகலாம் என அழைத்தேன். ஆனால், தூங்கினால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்தார். சிறிதுநேரத்தில் ரத்தம் ரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு புரண்டு புரண்டு துடித்தார்.
உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு ஊசி போட்டார்கள். ஆனால், மயங்கிப் போன அவர் அப்படியேஇறந்து போய்விட்டார். எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்த வேலை சோற்றுக்குக் கூட என்ன செய்வது என்றுதெரியவில்லை என்று கூறி அழுதார்.
மேலும் ஒரு சிறுமியின் தந்தையும் தாயும் சேர்ந்தே இங்கு குடித்துள்ளனர். இதில் தாய் இறந்துவிட்டார். தந்தை மருத்துவமனையில்உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அனாதை போல அந்தச் சிறுமி மருத்துவமனையில் அங்கும் இங்கும் ஓடி அழுதுகொண்டு நின்று கொண்டிருக்கிறாள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications