பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள்
மும்பை:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை அடுத்து, இந்தியாவிலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்த்து பறந்து கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், பயணிகள் விமானம்தங்கள் நாட்டின் வான் பகுதியைப் பயன்படுத்த எந்தவிதமான தடையையும் பாகிஸ்தான் விதிக்கவில்லை.
இருந்த போதிலும், பாதுகாப்பு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதியைத் தவிர்த்து,அரபிக் கடல் வான் பகுதியைப் பயன்படுத்தி, வளைகுடா வழியாகச் சென்று, தங்கள் பழைய வழிகளைத்தொடுகின்றன என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒவ்வொரு விமானமும் ஒரு மணி நேரம் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதையடுத்து,பயணிகளிடமிருந்து அதிக பயணக் கட்டணத்தை வசூலிக்கவும் வேண்டியிருக்கும்.
இதைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கா மற்றும் பாரிசுக்குச் செல்லும் விமானங்களும் அங்கிருந்து வரும்விமானங்களும் இனி மும்பை விமான நிலையத்திற்கே இயக்கப்படும் என்று ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதனால், அமெரிக்காவிலிருந்து டெல்லி செல்லும் பயணிகளுக்காக, மும்பையிலிருந்து டெல்லிக்கு வேறு ஒருசிறப்பு விமானத்தை இயக்கும் திட்டத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் வகுத்துள்ளது.
வார் ரிஸ்க் காரணமாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தொகைகளை உயர்த்தியிருப்பதால், ஒவ்வொருபயணியிடமிருந்தும் 3 முதல் 5 அமெரிக்க டாலர்களை அதிகமாகப் பெறவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications