சேலம் அரசு தொட்டிலில் மேலும் ஒரு பெண் குழந்தை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனக்கு பிறந்த 3வது பெண் குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில்தொட்டில் குழந்தையாக ஒப்படைத்தார்.

பெண் குழந்தைகள் பிறந்தால் அதை பெற்றவர்களோ அல்லது உறவினர்களோ ஈவிரக்கமின்றி கொன்றுவிடுகின்றனர். சிலரோ ஸ்கேன் செய்து, கருவிலிருப்பது பெண் குழந்தை என்று தெரிந்தால் கருவிலேயே அந்தசிசுவை சிதைத்து விடுகிறார்கள்.

பெண் சிசுக்கொலையை தடுக்கும் விதமாக தொட்டில் குழந்தை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு.இந்தத் திட்டத்தின்படி, பெண் குழந்தைகள் பிறந்தால், அந்த குழந்தைகளை விரும்பாத பெற்றோர், அதைக்கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிலில் போட்டு விட்டுச் சென்று விடலாம்.அதன் பின் அந்த குழந்தையை அரசே வளர்க்கும்.

சேலத்தில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவர் தனக்குப் பிறந்த 3வது பெண் குழந்தையை சேலம் அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் போட்டார்.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரதுமனைவி லட்சுமி (30). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் லட்சுமி. கணவனும், மனைவியும் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆவலுடன்இருந்தனர். ஆனாலும் மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது.

2 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வரும் ஏழுமலை 3வது பெண் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால்,அந்த குழந்தையை அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க முடிவெடுத்தார்.

அதன்படி தன் உறவினர்களுடன் குழந்தையை எடுத்துக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று,அங்கிருந்த தொட்டிலில் குழந்தையை போட்டார். இந்த பெண் குழந்தையை இனி அரசே வளர்க்கும்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தத் தொட்டில் குழந்தைத் திட்டம், கடந்த மே மாதம்புதிய அதிமுக ஆட்சியால் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+