பிரச்சாரத்தின் போது 2 வேட்பாளர்கள் மாரடைப்பால் மரணம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 வேட்பாளர்கள் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்து போனார்கள்.
இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 வேட்பாளர்கள் திடீரென மாரடைப்புஏற்பட்டு இறந்து போனார்கள்.
கோயம்புத்தூரையடுத்துள்ள துடியலூருக்கு அருகில் அமைந்துள்ளது அசோகபுரம் ஊராட்சி மன்றம். இந்த ஊராட்சிமன்றத்தின் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் சின்னான் (40).
இவர் தன் வார்டில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்காமல் நெஞ்சை பிடித்துக் கொண்டுசுருண்டு விழுந்தார் சின்னான்.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர்இறந்து போனார்.
இதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கவுண்டன் புதூரில், சூலூர் ஊராட்சி யூனியன் 9வது வார்டில் திமுக சார்பில்போட்டியிடுபவர் முத்துசாமி (45). இவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவ தினத்தன்று நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்முத்துதாமி. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications