சீர்காழி அருகே கடலுக்குள் சென்று 5 நாட்களாகியும் கரை திரும்பாத 6 மீனவர்கள்
சீர்காழி:
சீர்காழி அருகே இந்த மாதம் 2ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் இன்று வரை (திங்கள்கிழமை) கரைதிரும்பவில்லை. இவர்கள் 6 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகா, தொடுவாய் மீனவர் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24),ரவிச்சந்திரன் (21), ஆறுமுகம் (35), முருகன் (27), வீரசிங்கம் (40) மற்றும் சதீஷ் (24) ஆகியோர் மீன் பிடிப்பதற்காககடலுக்குள் சென்றனர்.
ஆனால் அவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று 5 நாட்களான பிறகும் கரை திரும்பவில்லை. அவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மீன் பிடிக்கச் சென்ற மற்ற மீனவர்களெல்லாம் கரை திரும்பிய பின்னும்இவர்கள் 6 பேரும் கரை திரும்பவில்லை.
இந்த பகுதியில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீனவர்கள் 6 பேரும் வழி தெரியாமல் திசை மாறிசென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது.
மீனவர்கள் காணாமல் போன தகவல், கிடைத்ததும் 50 மீனவர்கள் கடலுக்குள் விசைப்படகுகள் மூலம் சென்று,காணாமல் போன மீனவர்களை தேடி வருகின்றனர்.
தொடுவாய் ஊர் தலைவர் செல்வம் காணாமல் போன மீனவர்கள் குறித்து சீர்காழி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications